search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜர் - சிசிடிவி காட்சிகள் ஒப்படைக்கப்படுமா?
    X

    ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் ஆஜர் - சிசிடிவி காட்சிகள் ஒப்படைக்கப்படுமா?

    ஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் இன்று ஆஜராகினர். #JayalalithaaDeathProbe #ApolloHospitals
    சென்னை:

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையத்துக்கு அப்போலோ நிர்வாகம் முறையாக ஒத்துழைக்கவில்லை என சமீபத்தில் ஆணையம் குற்றம்சாட்டி இருந்தது.

    மேலும், முறையாக ஒத்துழைக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இதையடுத்து, ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல், இறந்த நாள் வரை உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளையும் மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைக்க வேண்டும் என சமீபத்தில் உத்தரவிட்டது.

    இந்நிலையில், இன்று ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவர்கள் இரண்டு பேர் ஆஜராகி உள்ளனர். இதயநோய் சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ், தலைமை பிசியோதெரபிஸ்ட் ராஜ்பிரசன்னா ஆகியோர் ஆஜராகி உள்ளனர். ஏற்கனவே சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அது எப்போது ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #JayalalithaaDeathProbe #ApolloHospitals
    Next Story
    ×