search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் சேர்ப்பு பணியில் திமுகவினர் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    வாக்காளர் சேர்ப்பு பணியில் திமுகவினர் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்- அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணியில் தி.மு.க.வினர், முகவர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும் என்று அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார்.

    முள்ளக்காடு:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பூபதி, கருணாகரன், மாவட்ட துணைச் செயலாளர் முகம்மது அப்துல்காதர், பொதுக்குழு உறுப்பினர்கள் சொர்ணகுமார், சாகுல்ஹமீது, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவை நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள நாட்களில் பொதுமக்களுக்கு உதவிகரமாக தி.மு.க.வினர் செயல்பட வேண்டும்.

    18 வயது நிரம்பிய வாக்காளர்களை கண்டறிந்து பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான முக்கியத்துவத்தை விளக்கி கூற வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி வாரியாக உள்ள முகவர்கள் இதில் சிறப்பாக செயல்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மன்ற தேர்தல் ஆகியவை வர உள்ளது. எனவே எந்த தேர்தல் எப்போது வந்தாலும் அதில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெறும் வகையில் நாம் களப்பணி ஆற்ற வேண்டும். எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் பணியில் தி.மு.க.வினர், முகவர்கள் எழுச்சியுடன் செயல்பட வேண்டும்.

    தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவும், செயலற்று கிடக்கும் தமிழக அரசையும், உள்ளாட்சிகளையும் மீண்டும் செயல்பட வைத்து மக்கள் நல பணியாற்றுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் ஒன்றிய, நகர , பேரூர் செயலாளர்கள், சார்பு, மாவட்ட, வர்த்தக அணி அமைப்பாளர்கள் மற்றும் மகேந்திரன், மாவட்ட தொண்டரனி அமைப்பாளர் சுந்தர் மற்றும் பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளர் இளங்கோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×