என் மலர்

  செய்திகள்

  செங்கம் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் பலி
  X

  செங்கம் அருகே கிணற்றில் விழுந்து வாலிபர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கம் அருகே நீச்சல் தெரியாததால் கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  செங்கம்:

  செங்கம் அடுத்த புதுப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 26). இவரது மனைவி காயத்திரி. இவர்களுக்கு 1 மகள் உள்ளார்.

  சம்பவத்தன்று பாலாஜி அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கிணற்றில் விழுந்தார். அவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் பாலாஜி பரிதாபமாக நீரில் முழ்கி இறந்தார்.

  இது குறித்து தகவலறிந்த செங்கம் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×