search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்க அக்டோபர் வரை கெடு விதிப்பு - அதிகாரி தகவல்
    X

    ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் எண் இணைக்க அக்டோபர் வரை கெடு விதிப்பு - அதிகாரி தகவல்

    ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். #Aadhaar #Rationcard
    சென்னை:

    போலி ரே‌ஷன் கார்டுகளை தடுப்பதற்காக ரே‌ஷன் கார்டுகளில் ஆதார் கார்டு எண் இணைக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது.

    2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆதார் எண் ரே‌ஷன் கார்டுகளுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. இதில் உள்ள விவரங்கள் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டுகளை தமிழக அரசு வழங்கி வருகிறது.

    ஆதார் அட்டையில் தனி நபரின் விழி, விரல் ரேகை ஆகியவை பதிவாகி உள்ளன. எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் எண் இணைக்கப்பட்டதன் மூலம் போலி ரே‌ஷன் கார்டுகள் தடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் முன்பு 2.01 கோடி ரே‌ஷன் கார்டுகள் இருந்தன. அதில் 6 கோடியே 77 லட்சம் உறுப்பினர்கள் விபரம் இடம் பெற்றிருந்தன. தற்போது 1 கோடியே 96 லட்சம் ரே‌ஷன் கார்டுகள் உள்ளன. இதில் 6 கோடியே 48 லட்சம் உறுப்பினர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

    ஆதார் கார்டு இருந்தும் பலர் ரே‌ஷன் கார்டுகளுடன் அதை இணைக்கவில்லை. ஒரு ரே‌ஷன் கார்டில் 6 உறுப்பினர்கள் இருந்தால் அதில் 3 அல்லது 4 பேர் மட்டுமே ஆதார் எண் பதிவு செய்துள்ளன.

    ஸ்மார்ட் கார்டுகளில் ஆதார் எண்களை இணைத்தவர்கள் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. விரைவில் விரல் ரேகை பதிவு செய்து ரே‌ஷன் பொருட்களை வழங்கும் பயோ மெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.

    எனவே ரே‌ஷன் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவருடைய பெயர்களும் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே ரே‌ஷன் கார்டில் ஆதார் விவரங்களை பதிவு செய்யாதவர்கள் வருகிற அக்டோபர் மாதம் 31-ந் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ரே‌ஷன் கடைகளில் ஒட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Aadhaar #Rationcard
    Next Story
    ×