என் மலர்

  செய்திகள்

  மினிலாரியில் கடத்தி வந்த 60 பண்டல் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது
  X

  மினிலாரியில் கடத்தி வந்த 60 பண்டல் புகையிலை பொருட்கள் பறிமுதல்- 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தொப்பூர் அருகே மினிலாரியில் கடத்தி வந்த 60 பண்டல் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.
  தருமபுரி:

  கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு தருமபுரி வழியாக அடிக்கடி பன்பராக், குட்கா, ஹான்ஸ் போன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மர்ம நபர்கள் கடத்தி செல்வதாக தருமபுரி மாவட்ட எஸ்.பி. பண்டி கங்காதருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு உத்தர விட்டார்.

  அவரது உத்தரவின் பேரில் கடந்த மாதத்தில் பெங்களூருவில் இருந்து குட்கா பொருட்களை தருமபுரி வழியாக கடத்தி வந்தவர்களையும், அவரது வண்டிகளையும் தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்தனர்.

  மீண்டும் குட்கா மற்றும் தடை செய்யப்ட்ட புகையிலை பொருட்களை தமிழகத்திற்கு கடத்தி செல்வதாக வந்த ரகசிய தகவலை கிடைத்தது. இதைத்தொடர்ந்து நேற்று தொப்பூர் சோதனை சாவடி அருகே போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஒரு மினிலாரியை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது வண்டியில் வந்த 4பேர் சந்தேகம்படியான முன்னுக்கு பின் முரணான பதில்களை தெரிவித்தனர். உடனே போலீசார் மினிலாரி சோதனை செய்தனர். அப்போது வண்டியில் 60 பண்டல்களில் 70 அட்டை பெட்டிகளில் அடைத்து மறைத்து வைத்து ஹான்ஸ் புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே 4 பேரையும் போலீசார் கைது விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் வண்டியை ஓட்டிவந்தவர் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் மன்சூர் (வயது 33) என்பதும், அவருடன் வந்தவர்கள் கோவை மரக்கடையை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (34), முகம்மது கலில் (36), உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ஆரிப் (25)என்பதும் தெரியவந்தது. கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை கோவை பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக பெங்களூருவில் உள்ள களாசிபாளையம் மார்க் கெட்டில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்டது. தொப்பூர் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டபோது அவர்கள் மாட்டிக் கொண்டனர்.

  கைதான 4பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
  Next Story
  ×