என் மலர்

  செய்திகள்

  அரசு போக்குவரத்து கழக பணிமனையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை
  X

  அரசு போக்குவரத்து கழக பணிமனையை முழுமையாக செயல்படுத்த வேண்டும்- காங்கிரஸ் கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை முழுமையாக செயல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  சாத்தான்குளம்:

  சாத்தான்குளம் வட்டார காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் சாத்தான்குளத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மகேந்திரன் தலைமையில் நடைபெற்றது. வட்டார தலைவர் ஜனார்த்தனம், மாவட்ட துணைத் தலைவர் சங்கர், மாவட்ட துணை செயலாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

  கூட்டத்தில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், சாத்தான்குளம் வட்டாரத்தில் அதிக அளவில் கட்சியினர் பூத் கமிட்டி அமைத்து பொதுமக்களின் பிரச்சனைக்காக உழைக்க வேண்டும், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக அளவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்றார்.

  கூட்டத்தில் மாவட்ட துணை தலைவர் தேவ திரவியம், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அன்புராணி, வட்டாரத் தலைவர்கள் உடன்குடி ஜோசப் துரைராஜ், ஸ்ரீவை. சற்குணம், ஸ்ரீவை. வட்டாரத் தலைவர் நல்லகண்ணு, தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன் உட்பட பலர் பேசினார்கள்.

  முன்னதாக அனைவரையும் சாத்தை நகரத் தலைவர் வக்கீல் வேணுகோபால் வரவேற்று பேசினார். கூட்டத்தில் சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முழுமையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த பணிமனையிலிருந்து கூடுதலாக பஸ்கள் இயக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் நிர்வாகிகள் கண்மணி ஜெயபிரகாஷ், மரியராஜ், ராபின்சன், ஆனந்தபுரம் நல்லதம்பி உட்பட கட்சியினர் திரளானோர் கலந்து கொண்டனர். முடிவில் சாத்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் அலெக்ஸ் ஜோசப் நன்றி கூறினார்.
  Next Story
  ×