என் மலர்
செய்திகள்

உசிலம்பட்டி அருகே வீட்டில் தூங்கிய பெண்களிடம் நகை பறிக்க முயற்சி - வாலிபர் கைது
உசிலம்பட்டி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்களிடம் நகை பறிக்க முயன்ற வாலிபரை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள கருப்பணம்பட்டியைச் சேர்ந்தவர் தெய்வம். இவரது மருமகள்கள் பபிதா, தாரணி ஆகியோர் வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது 19 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் வீட்டில் புகுந்து திருட முயன்றார். பபிதா கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறிக்க முயன்ற போது விழித்துக் கொண்ட பபிதா கூச்சலிட்டார். உடனே மர்ம நபர் தப்பி ஓடினான்.
இதுகுறித்து உசிலம்பட்டி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபாண்டி (19) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story