என் மலர்

  செய்திகள்

  பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது
  X

  பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெண்ணிடம் நகை பறித்த கும்பகோணம் செயின் பறிப்பு கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
  வலங்கைமான்:

  நாகை மாவட்டம் நீரவியை சேர்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (வயது 45). இவர் திருவாரூர் மாவட்டம் தொழுவூரில் உள்ள தனது சகோதரி மகளின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கிருந்து நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வலங்கைமான் சென்று சந்தையில் காய்கறி வாங்கினார். பின்னர் தொழுவூர் புறப்பட்டு சென்றார். அவரது பின்னால் உறவினர்கள் சென்றனர். 

  சாந்தி வலங்கைமான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே சென்றபோது ஒரு மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சாந்தி அணிந்திருந்த செயினை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன், திருடன் என்று சத்தம் போட்டார். 

  இதைத்தொடர்ந்து அவருடன் வந்த உறவினர்கள் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்களையும் விரட்டி சென்றனர். இதில் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் தங்கள் அருகில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்தனர். இதில் சாந்தியின் உறவினர்கள் 2 பேர் காயமடைந்தனர். 

  சுமார் 4 கி.மீ வரை போக்கு காட்டிய கொள்ளையர்கள் வந்த ரோட்டில் தொடர்ந்து செல்ல முடியாததால் மோட்டார் சைக்கிளின் முகப்பு விளக்குகளை அணைத்துவிட்டு வந்த வழியிலேயே திரும்பி வந்தனர். 

  இதனை அறிந்த சாந்தியின் உறவினர்கள் வலங்கைமான் கடைவீதியில் வைத்து 2 கொள்ளையர்களையும் பிடித்து வலங்கைமான் போலீசில் ஒப்படைத்தனர். 
  Next Story
  ×