என் மலர்

  செய்திகள்

  புதுவையில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
  X

  புதுவையில் ஆட்டோ டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை - போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுவையில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  புதுச்சேரி:

  புதுவை சாரம் சக்தி நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன். (வயது 42). இவருக்கு முத்தழகு என்ற மனைவியும், பிரேம்ராஜ் (17), பிரேம்சாந்த் (14) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

  இதற்கிடையே மினி வேன் வாங்கி ஓட்டி வந்த புருஷோத்தமன் அதனை விற்று விட்டு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார்.

  ஆனால், குடிப்பழகத்தினால் புருஷோத்தமன் ஆட்டோ தொழிலுக்கும் கடந்த சில நாட்களாக செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இதனால் முத்தழகு டெய்லர் வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

  நேற்று மூத்த மகன் பிரேம்நாத் பிறந்த நாளை மது குடித்து கொண்டாட புருஷோத்தமன் முடிவு செய்தார். இதற்காக டெய்லர் கடைக்கு சென்று மனைவி முத்தழகுவிடம் மது குடிக்க பணம் கேட்டார். அதற்கு முத்தழகு மகனுக்கு பிறந்த நாள். புத்தாடை வாங்கி தர முடியாத நிலையில் உள்ளதால் தற்போது பணம் எதுவும் இல்லை என்று கூறி பணம் தர மறுத்து விட்டார்.

  இதனால் மனமுடைந்த புருஷோத்தமன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து அங்கிருந்து வீட்டுக்கு வந்தார். அங்கு வீட்டின் அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தொங்கினார்.

  சிறிது நேரம் கழித்து வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய மூத்த மகன் பிரேம்ராஜ் தந்தை தூக்கில் தொங்குவதை கண்டு அலறி னார்.

  பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புருஷோத்தமனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத் திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே புருஷோத்தமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

  இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன்பேட்டை போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  மற்றொரு சம்பவம்...

  புதுவை சண்முகாபுரம் வழுதாவூர் சாலை அணைக்கரை வீதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (42). நரிக்குறவர். இவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மது குடிக்கும் பழக்கம் உள்ள ஜெய்சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

  அது போல் நேற்று இரவும் ஜெய்சங்கர்மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்தார். மேலும் மனைவி, குழந்தைகளை தாக்கினார். இதற்கு பயந்து அஞ்சலை தனது குழந்தைகளை அங்கிருந்து அழைத்து சென்று விட்டார்.

  சிறிது நேரம் கழித்து அஞ்சலை வீட்டுக்கு வந்து பார்த்த போது, அங்கு கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் இதுகுறித்து மேட்டுப் பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இனியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×