என் மலர்

  செய்திகள்

  வாஜ்பாய் மறைவையொட்டி குமரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் மவுன ஊர்வலம்
  X

  வாஜ்பாய் மறைவையொட்டி குமரி மாவட்டத்தில் பா.ஜனதாவினர் மவுன ஊர்வலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் வாஜ் பாய் மறைவையொட்டி குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் 11 இடங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. #vajpayeedeath
  நாகர்கோவில்:

  முன்னாள் பிரதமர் வாஜ் பாய் மறைவையொட்டி குமரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் 11 இடங்களில் மவுன ஊர்வலம் நடந்தது. நாகர்கோவில் வடசேரியில் நடந்த மவுன ஊர்வலத்திற்கு நகர தலைவர் நாக ராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், முன்னாள் நகரசபை தலைவர் மீனா தேவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநில துணைத்தலைவர் எம்.ஆர்.காந்தி, மாவட்ட பார்வையாளர் தேவ், மாவட்ட பொருளாளர் தர்மலிங்க உடையார் மற்றும் நிர்வாகிகள் முத்து ராமன், ராஜன், ராகவன், சிவலிங்கம், ஜெயச்சந்திரன், முருகன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். வடசேரியில் இருந்து தொடங்கிய மவுன ஊர்வலம் மணி மேடை வழியாக வேப்ப மூட்டில் முடிவடைந்தது.

  அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் சார்பில் வழுக்கம்பாறையில் இருந்து சுசீந்திரம் வரையிலும், மேல்புறம் ஒன்றியம் சார்பில் புன்னியம் - அருமனை வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது. முஞ்சிறை ஒன்றியத்தில் புதுக்கடை சந்திப்பு முதல் முஞ்சிறை வரையிலும், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் கணபதிபுரம் சந்திப்பில் இருந்து ராஜாக்கமங்கலம் வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது.
  குருந்தன்கோடு ஒன்றியத்தில் திங்கள்சந்தையிலும், கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் பாலூர் சந்திப்பு முதல் கருங்கல் வரையிலும், தக்கலையில் கொல்லன் விளை பார்த்தசாரதி கோவி லில் இருந்து தக்கலை பஸ் நிலையம் வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது.

  திருவட்டார் ஒன்றியம் சார்பில் குலசேகரத்திலும், தோவாளை ஒன்றியம் சார்பில் பூதப்பாண்டியிலும் மவுன ஊர்வலம் நடந்தது. களியக்காவிளை சந்திப்பில் இருந்து படந்தாலுமூடு வரையிலும் மவுன ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பா.ஜ.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர். #vajpayeedeath
  Next Story
  ×