என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
கொடிவேரியில் தண்ணீர் குறைந்தாலும் குளிக்க தடை- போலீஸ் பாதுகாப்பு
By
மாலை மலர்18 Aug 2018 11:51 AM GMT (Updated: 18 Aug 2018 11:51 AM GMT)

கொடிவேரியில் தண்ணீர் அளவு இன்றும் குறைந்த போதிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கொடிவேரி அணையின் முகப்பு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோபி:
பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
அணை தண்ணீர் சத்திய மங்கலத்தை தாண்டி கொடிவேரிக்கு வருகிறது. தற்போது வெள்ளப் பெருக்கு காரணமாக கொடிவேரி அணையில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 நாட்களாக இந்த நிலை நீடித்தது. அணையே தெரியாத அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இன்று தண்ணீரின் அளவு சிறிது குறைந்தது.
எனினும் இன்றும் கொடிவேரியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது. இதனால் குளிக்கும் ஆர்வத்தில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து செல்கிறார்கள். தண்ணீர் அதிகம் செல்வதால் யாரும் குளிக்க சென்று வெள்ளத்தில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக கொடிவேரி அணையின் முகப்பு பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்றும் அவர்களது பாதுகாப்பு பணி தொடர்கிறது.

Next Story
×