என் மலர்
செய்திகள்

திண்டுக்கல்லில் நடுரோட்டில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு
திண்டுக்கல்லில் திடீரென நடுரோட்டில் பற்றி எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாசிலாமணி புரத்தை சேர்ந்தவர் சக்தி. எலக்ட்ரீசியனாக உள்ளார். இன்று காலை பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆர்த்திதியேட்டர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரின் என்ஜினில் இருந்து புகை வந்தது.
சிறிதுநேரத்தில் தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே காரை நடுரோட்டில் நிறுத்தி இறங்கினார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். மேலும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மேலும் எவ்வாறு தீப்பற்றியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






