search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம்கோர்ட்டில் மறுவிசாரணைக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் இறுதி முடிவு- சபாநாயகர்
    X

    சுப்ரீம்கோர்ட்டில் மறுவிசாரணைக்கு பிறகு நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் இறுதி முடிவு- சபாநாயகர்

    நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம்கோர்ட் மறுவிசாரணைக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன் கேள்விக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்தார். #PuducherryAssembly #Vaithilingam
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் நிதி ஒதுக்க மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் லட்சுமி நாராயணன், ஒரு உரிமை பிரச்சினையை எழுப்பி பேசினார்.

    அவர் பேசும்போது, மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் 3 நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்துள்ளது. இவர்களை சட்டசபைக்குள் அனுமதிக்கக்கூடாது என நான் சபாநாயகருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு என்ன பதில் அளிக்கிறீர்கள்? என்று கேட்டார்.

    இதையடுத்து சபாநாயகர் வைத்திலிங்கம் பதிலளித்து பேசியதாவது, சுப்ரீம் கோர்ட்டின் எதிர்பார்ப்பிற்கு இணங்க 3 பேரும் இந்த சட்டமன்ற கூட்ட நடவடிக்கையில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறார்கள். இது உச்ச நீதிமன்றத்தில் 11.9.2018-ல் மறுவிசாரணை வரும் வரை பொருந்தும். அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். #PuducherryAssembly #Speaker #Vaithilingam
    Next Story
    ×