search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னிமலை பகுதியில் போலி பதிவு எண்ணுடன் லாரியில் கிராவல் மண் கடத்தல்
    X

    சென்னிமலை பகுதியில் போலி பதிவு எண்ணுடன் லாரியில் கிராவல் மண் கடத்தல்

    சென்னிமலை அருகே போலி பதிவு எண்ணில் கிராவல் மண் கடத்திய லாரியை பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி பறிமுதல் செய்தார்.
    சென்னிமலை:

    நேற்று முன் தினம் இரவு வெள்ளோடு அடுத்த புங்கம்பாடி பகுதியில் அனுமதியின்றி கிராவல் மண் கொண்ட லாரியை நிறுத்தி பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி விசாரணை செய்தார். இந்த லாரியை அரச்சலூரை சார்ந்த பழனிசாமி என்பவர் ஓட்டி வந்தார். சென்னிமலை பகுதியில் குவாரியில் இருந்து மண் எடுத்து வந்ததாகவும் மேட்டுக்கடை பகுதியில் விற்பனைக்காக கொண்டு செல்வதாகவும் கூறினார்.

    மேலும் இந்த லாரியில் இரண்டு பதிவெண்கள் ஒட்டப்பட்டு இருந்தது கண்டு தாசில்தார் அதிர்ச்சி அடைந்தார். தாசில்தார் அலுவலகத்திற்கு லாரி கொண்டுவரப்பட்டது. கிராவல் மண்ணுக்கு அபராதம் விதிக்க கோட்டாச்சியருக்கு பரிந்துறை செய்த தாசில்தார் போலி பதிவெண் குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கட ரமணியிடம் புகார் தெரிவித்தார்.

    இதனடிப்படையில் ஆய்வு செய்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டப்பட்ட இரண்டு எண்களுமே போலியானது என்பதால் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி வெள்ளோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். லாரியில் உள்ள இரண்டு எண்களுமே போலி என்பதால் வண்டியில் உள்ள சேஸ் நம்பரை வைத்து தான் லாரி உரிமையாளரை அடையாளம் காணும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×