என் மலர்

  செய்திகள்

  கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்
  X

  கூட்டுறவு சங்கம் சார்பில் பெட்ரோல் பங்க்- அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பூர் ரோட்டில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
  உடுமலை:

  திருப்பூர் ரோட்டில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் புதிய பெட்ரோல் நிலையத்தை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

  கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கிராமப்புறங்களைச் சார்ந்தவர்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வீதம் 77 ஆயிரம் பேருக்கு ரூ.50 கோடி மதிப்பில் விலையில்லா நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தினையும் மற்றும் முதல் முறையாக மேற்கு மாவட்டங்களை சார்ந்த ஏழை பெண்களுக்கு 12000 கறவை பசுக்களும் தொடர்ந்து விலையில்லா ஆடுகளும் வழங்கும் திட்டத்தினையும் தொடங்கி வைக்கவுள்ளார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் 4.9.1935 முதல் செயல்பட தொடங்கிய நாளில் இருந்து சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. தற்போது சங்கத்தில் 8560 உறுப்பினர்களை கொண்டு ரூ.15.25 லட்சம் பங்கு மூலதனத்துடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மேலும், விவசாய பெருங்குடி மக்களிடம் விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை பணியினையும் மேற்கொண்டு வருகிறது.

  கடந்த 5 ஆண்டுகள் அரசு ஆதார விலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளிடம் கொப்பரைகள் ரூ.65 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

  மேலும், இச்சங்கத்தின் சார்பில் செயல்படும் அம்மா மருந்தகம் பொது மக்களுக்கு மருத்துவ சேவையினை புரிந்து ரூ.4.90 கோடிக்கு விற்பனை இலக்கினை எட்டியுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கு சுமார் 70 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  இச்சங்கத்தின் சார்பில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் இப்பகுதியில் புதிதாக பெட்ரோல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  நிகழ்ச்சியில் பொள்ளாச்சி எம்.பி., சி.மகேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அசோகன், முன்னாள் வாரியத்தலைவர் லியாகத், இந்துஸ்தான் பெட்ரோலிய மண்டல மேலாளர் நாகேஷ், துணைப்பதிவாளார்கள் சண்முகவேலு, திருமாவளவன், கூட்டுறவு சார்பதிவாளார்கள் சாகுல் ஹமீது, உதயகுமார், அப்துல் கபாப், நிர்மலா, கூட்டுறவு சங்க மேலாளார் ரவி, அரசு அலுவலர்கள் மற்றும் முன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் உட்பட ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×