search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனியில் குளத்தில் மண் கடத்திய டிராக்டர்களை மடக்கிய அதிகாரிகள்
    X

    பழனியில் குளத்தில் மண் கடத்திய டிராக்டர்களை மடக்கிய அதிகாரிகள்

    அனுமதியின்றி குளத்தில் மண் கடத்திய டிராக்டர்களை அதிகாரிகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பழனி:

    பழனி அருகே உள்ள அய்யம்புள்ளி குளத்தில் நேற்று முன்தினம் இரவு அனுமதியின்றி மண் எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி தாசில்தார் சரவணன், மண்டல துணை தாசில்தார் பிரசன்னா, வருவாய் ஆய்வாளர் பிரபு சிவசங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது குளத்தில் 4 டிராக்டர்களில் மண் எடுக்கப்பட்டு இருந்தது.

    அதிகாரிகள் வருவதைக் கண்ட டிராக்டர் டிரைவர்கள் ஏற்றிய மண்ணுடன் விரைவாக தப்பிச் செல்ல முயன்றனர். இதில் 2 டிராக்டர்களை சம்பவ இடத்திலே வருவாய்த்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். மற்ற 2 டிராக்டர்களில் மண் எடுத்து தப்பிச் சென்று விட்டனர்.

    பிடிபட்ட 2 டிராக்டர்கள் பழனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் விசாரணை நடத்தியதில் மற்றொரு டிராக்டரையும் வருவாய்த்துறையினர் பிடித்தனர். மேலும் மண் அள்ளிச்சென்ற ஒரு டிராக்டரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×