search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வாரியம் விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வரும் - அமைச்சர் தங்கமணி பேட்டி
    X

    மின்வாரியம் விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வரும் - அமைச்சர் தங்கமணி பேட்டி

    ‘மின்வாரியத்துறை விரைவில் லாபத்தை அடையும் நிலைக்கு வந்து விடும்’ என அமைச்சர் தங்கமணி கூறினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மண்டல மின்வாரியத்துறை வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    முன்னதாக அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மண்டலம் வாரியாக ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறோம். கடந்த ஒரு ஆண்டில் 3 லட்சத்து 85 ஆயிரம் மின் இணைப்புகள் ஒரே நாளில் கொடுக்கப்பட்டுள்ளது சாதனையாகும்.

    விவசாயிகளிடம் தட்கல் திட்டம் தற்போது அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியம் வெளிப்படை தன்மையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. மின்வாரியத்தில் 3 வருடம் ஒரே இடத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக கேட்டிருந்தோம். அதன்படி ஆன்லைனில் 14 ஆயிரம் மனுக்கள் வந்திருக்கிறது. அந்த மனுக்களில் ஊழியர்கள் எந்த இடத்தில் மாறுதல் கேட்டிருக்கிறார்களோ அவர்களுக்கு பணி மாறுதல் விரைவில் வழங்கப்படும்.

    மின்சார வாரியம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.14 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இருந்தது. தற்போது இது ரூ.3 ஆயிரம் கோடியாக குறைந்துள்ளது. நிலக்கரியாக இருந்தாலும் மற்ற எந்த டெண்டராக இருந்தாலும் இ-டெண்டர் முறையில் நடைபெற்று வருவதால், விரைவில் மின்வாரியத்துறை லாபத்தை அடையும் நிலைக்கு வரும்.

    மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. மழைக்காலம் மற்றும் இயற்கை இடர்பாடுகளின் போது பொதுமக்கள் மின்தடையால் அவதியடைய கூடாது என்பதற்காக, உடனுக்குடன் பணிகள் நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×