என் மலர்tooltip icon

    செய்திகள்

    செம்பனார்கோவில் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு
    X

    செம்பனார்கோவில் அருகே கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

    கணவருடன் சென்ற பெண்ணிடம் 3 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பறித்து சென்றனர். இந்த சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் பொறையாறு நெல்லுக்காரத் தெருவை சேர்ந்தவர் ஆன்றன் பீட்டர். இவரது மனைவி குமுதவல்லி (வயது 54).

    இவர்கள் சென்னை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மயிலாடுதுறைக்கு சென்றனர். அவர்கள் இரவு 10 மணி அளவில் காளகஸ்திநாதபுரம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் சென்றபோது அவர்களை பின் தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் குமுதவல்லி சென்ற மோட்டார் சைக்கிளில் மோதுவது போல சென்று அவர் அணிந்து இருந்த 3 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த குமுதவல்லி இதுபற்றி செம்பனார் கோவில் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) நடராஜன் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.

    இந்த சம்பவம் செம்பனார் கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×