என் மலர்
செய்திகள்

குலசேகரன்பட்டிணத்தில் மளிகை கடையில் திருட்டு
குலசை மீன் கடை பஜாரில் மளிகை கடையில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உடன்குடி:
குலசேகரன்பட்டிணத்தை சேர்ந்தவர் மீராசாகிப் (வயது65) இவர் குலசை மீன் கடை பஜாரில் மளிகை கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல் கடையை திறக்க வந்தார். அப்போது கடைகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு கடையை திறந்து பார்த்த போது உள்ளே வைக்கப்பட்டிருந்த ரொக்க பணம் ரூ. 15 ஆயிரம் மற்றும் ஏராளமான மளிகை பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ. 50 ஆயிரம் என தெரிகிறது.
இது குறித்து குலசேகரன்பட்டிணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






