என் மலர்
செய்திகள்

பட்ஜெட்டுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின் மீண்டும் சட்டசபை கூட்டம்: சபாநாயகர் அறிவிப்பு
நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். #puducherryassembly
புதுச்சேரி:
இன்று காலை 11.30 மணிக்கு சபாநாயகர் காலவரையின்றி சபையை ஒத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
துறைரீதியான நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒட்டுமொத்த நிதி ஒதுக்க மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந்தோம்.
ஆனால், அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலை ஏற்படும். அரசு கொடுத்த பணிகளை நான் முடித்துவிட்டேன். நிதி ஒதுக்க மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த பின்னர் மீண்டும் சட்டமன்றத்தை கூட்டி சபையின் ஒப்புதல் பெறப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். #puducherryassembly
Next Story






