என் மலர்
செய்திகள்

பெரம்பலூர் அருகே 2 குழந்தைகளின் தாய் தற்கொலை
போதைக்கு கணவர் அடிமையானதால் 2 குழந்தைகளின் தாய் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் அருகே உள்ள குளத்தூரை சேர்ந்தவர் கருப்புசாமி. இவர் கடந்த 13 வருடங்களுக்கு முன் ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கருப்புசாமிக்கு தொடர்ந்து குடி பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவர் அக்கம் பக்கத்தினரின் பழி சொல்லுக்கு ஆளானார். தனது கணவரிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிட்டு ஒழுக்கமாக வாழும்படி அறிவுரை செய்து வந்தார்.
தனது மது பழக்கத்திற்கு மனைவி தடையாக உள்ளாரே என நினைத்த கருப்புசாமி அடிக்கடி போதையில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் எவ்வளவு கூறியும் கேட்காமல் தொடர்ந்து குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை தொல்லை செய்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்திற்கு மேல் வாழ்க்கையில் வெறுப்படைந்த ரேவதி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டார்.
பின்னர் வீட்டிற்கு வந்த கணவர் கருப்பசாமி மனைவி தூக்கில் பிணமாக கிடந்ததை பார்த்து கதறினார். இது குறித்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






