search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாளை கருத்தை தெரிவிப்பேன்- கவர்னர் கிரண்பேடி
    X

    உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நாளை கருத்தை தெரிவிப்பேன்- கவர்னர் கிரண்பேடி

    உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை தனது கருத்தை தெரிவிப்பதாக கவர்னர் கிரண்பேடி கூறினார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்துக்கு ஆய்வு செய்ய சென்றார்.

    அப்போது அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ளப்படாமல் குப்பை மேடாக இருப்பதை கண்ட கவர்னர் கிரண்பேடி அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் துப்புரவு ஊழியர்களிடம் அலுவலகத்தை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இந்த துப்புரவு பணிகளை ஆய்வு செய்ய வருவதாகவும் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்று காலை கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் ஊசுட்டேரியை ஆய்வு செய்ய சென்றார். அங்கு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுடன் மரக்கன்று நட்டார்.

    பின்னர் அங்கிருந்து வம்பா கீரப்பாளையத்தில் உள்ள மின்துறை அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அலுவலகம் முழுவதையும் சென்று ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி அங்கு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தூய்மையாக உள்ளதை கண்டு துப்புரவு ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவையில் நான் முக்கியத்துவம் கொடுப்பது தூய்மை பணிக்கும், நீராதாரத்தை பாதுகாக்கவும் மட்டுமே.

    புதுவை தற்போது தூய்மையாக உள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. அனைவரின் ஒத்துழைப்பு முக்கியமாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து புதுவையில் யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதற்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) எனது கருத்தை தெரிவிக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×