என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்ரீமுஷ்ணம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
    X

    ஸ்ரீமுஷ்ணம் அருகே பஸ் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

    ஸ்ரீமுஷ்ணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    ஸ்ரீமுஷ்ணம் சன்னதி வீதி நகரைச் சேர்ந்தவர் நாகராஜன். இவரது மகன் அன்பரசன்(வயது 24). கார் டிரைவர். நேற்று மதியம் 4 மணியளவில் அன்பரசன் தனது மோட்டார் சைக்கிளில் விருத்தாசலம் செல்வதற்காக ஆத்துகுறிச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே ஸ்ரீமுஷ்ணம் நோக்கி வந்த தனியார் பஸ் திடீரென்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அன்பரசன் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்த அன்பரசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×