search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    லாஸ்பேட்டையில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
    X

    லாஸ்பேட்டையில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை

    லாஸ்பேட்டையில் திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    கடலூர் வெள்ளப்பாக்கம் பள்ளத் தெருவை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 31). இவர், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லாஸ்பேட்டை சண்முகா நகரில் உள்ள தனது அக்காள் அறிவழகி வீட்டில் தங்கி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார்.

    தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி அரிதாஸ் தனது அக்காள் அறிவழகியிடம் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். ஆனால், பல இடங்களில் பெண் பார்த்தும் அரிதாசுக்கு ஏற்ற பெண் அமையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அரிதாஸ் மன வருத்தத்தில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் மன முடைந்த அரிதாஸ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று இரவு அச்சகத்தில் இருந்து வீடு திரும்பிய அரிதாஸ் வீட்டின் அறையை பூட்டி கொண்டு ஆஸ்பெட்டாஸ் கூரையில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு தொங்கினார்.

    சந்தேகம் அடைந்த அரிதாசின் அக்காள் கணவர் ஆடலரசு கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அரிதாஸ் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×