search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாரி ஸ்டிரைக் மீண்டும் 20-ந்தேதி தொடங்குகிறது
    X

    லாரி ஸ்டிரைக் மீண்டும் 20-ந்தேதி தொடங்குகிறது

    லாரி உரிமையாளர்களில் மற்றொரு அமைப்பான தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வருகிற 20-ந்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர். #LorryStrike

    சென்னை:

    சுங்க சாவடி மற்றும் இன்சூரன்சு கட்டணத்தை குறைக்க வேண்டும், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த வாரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    லாரி உரிமையாளர்களில் மற்றொரு அமைப்பான தென் மாநில மோட்டார் போக்குவரத்து உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் வருகிற 20-ந்தேதி முதல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா நிரூபர்களிடம் கூறியதாவது:-

    அரசுக்கு சுங்கச்சாவடிகளால் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவாக மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

    எனவேதான் நாங்கள் சுங்கச் சாவடிகளை முற்றிலும் அகற்றுமாறு தெரிவிக்கிறோம். ஒரு லாரிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நாடு முழுவதும் இயங்கும் 68 லட்சம் லாரிகளுக்கு சுங்கக் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை என்ற அடிப்படையில் செலுத்துவதாக கூறுகிறோம். ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கையை ஏற்காமல் உள்ளது.

    ஏற்கனவே 3 முறை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு விட்டோம். ஆனால் மத்திய அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இதனால் ஜூலை 20-ந்தேதி முதல் காலவரையற்ற லாரிகள் வேலை நிறுத்தத்தை தொடங்க உள்ளோம்.

    ஒட்டு மொத்தமாக 68 லட்சம் லாரிகள் 20-ந்தேதி ஓடாது. இதனால் அரசுக்கு தினமும் ரூ.5 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதில் தமிழகத்துக்கு ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.

    இந்த முறை எங்களின் கோரிக்கைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறை வேற்றும் வரை ஸ்டிரைக்கை கைவிட மாட்டோம்.

    இவ்வாறு சண்முகப்பா கூறினார். #LorryStrike

    Next Story
    ×