search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    விதிமுறைப்படி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி
    X

    விதிமுறைப்படி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதா? - தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் முறையான விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டதா? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiFiring
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தினை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தினை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

    இதையடுத்து, இந்த வழக்கை விசாரணை ஆணையம் விசாரித்தால் நேர்மையான தீர்ப்பு வழங்கப்படாது எனக்கூறி, விசாரணை ஆணையத்துக்கு தடை விதிக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம் முறையான விதிமுறைகளின் அடிப்படையில் அமைக்கப்பட்டதா? என்றும், சட்டத்துக்கு உட்பட்டு ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா எனவும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக தமிழக அரசு வரும் 27-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. #ThoothukudiFiring
    Next Story
    ×