என் மலர்
செய்திகள்

ரெயில் முன் பாய்ந்து கேரள கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
கோவையில் ரெயில் முன் பாய்ந்து கேரள கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அனீஸ். இவரது மனைவி தன்யா (வயது 33). இவர்களுக்கு 1 மகன், 1 மகள் உள்ளனர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த தனது உறவினரான சஞ்சு (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. சஞ்சு திருமணம் ஆகாதவர். நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அனீஸ் வேலைக்கு செல்லும் நேரத்தில் தன்யா, சுஞ்சு ஆகியோர் தனிமையில் சந்தித்து தங்களது கள்ளக்காதலை வளர்ந்து வந்தனர்.
கள்ளக்காதல் விவகாரம் அனீசுக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்யா குழந்தைகளை தவிக்க விட்டு விட்டு தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறினர்.
மாயமான மனைவியை கண்டுபிடித்து தரும்படி அனீஸ் அந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தன்யாவை தேடி வந்தனர்.
இந்தநிலையில் கள்ளக்காதல் ஜோடி நேற்று கோவைக்கு வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தங்களை குடும்பத்தினர் பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர்.
அதன்படி மதுக்கரை ரெயில் நிலையத்துக்கும், போத்தனூர் ரெயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாள பகுதிக்கு நள்ளிரவு 12 மணியளவில் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த கள்ளக்காதல் ஜோடியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து கேரளாவில் உள்ள உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் கோவைக்கு வந்ததும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல்கள் ஒப்படைக்கப்படும். #tamilnews

Next Story