என் மலர்
செய்திகள்

மதுரையில் கத்திமுனையில் பணம் பறித்த வாலிபர்கள் கைது
மதுரையில் கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை பொன்மேனி சுரேந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது 36). இவர் கென்னட் ரோடு கார் பார்க்கிங் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் ஜானகி ராமனை கத்தி முனையில் மிரட்டினர். பின்னர் ஜானகிராமனிடம் இருந்த செல்போன் மற்றும் 1000 ரூபாயை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜானகி ராமன் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வழிப்பறியில் ஈடுபட்ட மகபூப் பாளையம் சீத்தாலட்சுமி நகரைச் சேர்ந்த பாப்ளி (25), வண்டியூர் செம்மன் ரோட்டைச் சேர்ந்த பாண்டி மகன் அஜீத் (19) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story






