என் மலர்
செய்திகள்

ரெயிலில் பயணம் செய்த முதியவர் திடீர் மாயம் - மகன் போலீசில் புகார்
ஈரோடு:
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் குடவல்லூரைச் சேர்ந்தவர் பிஜூ (வயது45). இவரது தந்தை கேசவன் (70).கேசவன் பெங்களூரு, சிக்கஹன்னி பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 7-ந் தேதி பெங்களூரு சென்ற பிஜூ தனது தந்தை கேசவனை அழைத்து கொண்டு குடவல்லூர் செல்வதற்காக பெங்களூரில் இருந்து கேரளா செல்லும் ரெயிலின் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.
இரவில் கேசவனும். பிஜூயும் தூங்கினர். மறுநாள் (8-ந் தேதி) அதிகாலை இந்த ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது. அப்போது பிஜூ தனது தந்தை கேசவனை பார்த்த போது அவர் அங்கு இல்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த பிஜூ அங்குள்ள பெட்டிகளில் தேடியுள்ளார். ஆனால் கேசவன் குறித்து எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இது குறித்து பிஜூ ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கேசவனை தேடி வருகிறார்கள்.






