என் மலர்

  செய்திகள்

  பராமரிப்பின்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்
  X

  பராமரிப்பின்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் பராமரிப்பு இன்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் இன்று தெரிவித்தார். #TNAssembly #MKStalin #Sengottaiyan
  சென்னை:

  சட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, நூலகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

  இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உள்ளாட்சித்  துறையிடம் இருந்து உரிய நிதி பெற்று பராமரிப்பு இன்றி உள்ள நூலகங்கள் சீரமைக்கப்படும் என்றார்.

  மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் நூலகங்களில் வைப்பதற்காக நூல்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.  இதேபோல் மின்துறை சார்ந்த கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கையில், தமிழகத்தில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் தாழ்வான மின் கம்பங்கள் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். #TNAssembly #MKStalin #Sengottaiyan
  Next Story
  ×