என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமேசுவரத்தில் பெண் பக்தரிடம் 12 பவுன் நகை திருட்டு
    X

    ராமேசுவரத்தில் பெண் பக்தரிடம் 12 பவுன் நகை திருட்டு

    ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடிய வட மாநில பெண் பக்தரின் 12ம பவுன் மதிப்புள்ள தங்க செயின் மற்றும் ரொக்கம் பணம் திருடுபோனது.

    ராமேசுவரம்:

    மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதியை சேர்ந்த யோகேஷ் கலே மனைவி விருசாலி (36). இவர் உறவினர்களுடன் ராமேசுவரம் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தார்.

    அக்னிதீர்த்தம் கடற்கரையில் நீராட செல்லும் போது அவர் அணிந்திருந்த 12ம பவுன் தங்க செயினை கழற்றி கைப்பையில் வைத்தார். அந்த பையில் ரூ.10 ஆயிரம் பணமும் இருந்தது.

    பின்னர் அந்தப் பகுதியில் இருந்த அடையாளம் தெரியாத வயதான பெண்ணிடம் கைப் பையை கொடுத்து பார்த்துக்கொள்ளுமாறு நீராட சென்றார்.

    விருசாலி திரும்பி வந்து பார்த்தபோது அந்த மூதாட்டியை காணவில்லை. திருடு போன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

    இதையறிந்த விருசாலி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து ராமேசுவரம் கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் வேலம்மாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நகையுடன் மாயமான மூதாட்டியை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×