என் மலர்
செய்திகள்

பொறியியல் படிப்பில் சேர ரேண்டம் எண் நாளை வெளியீடு- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. #AnnaUniversity
சென்னை:
என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. கலந்தாய்விற்காக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவ-மாணவிகள் வந்து செல்வதை தடுக்கும் வகையில் அவர்கள் இருக்கும் பகுதியில் இருந்தவாறு கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரிகளையும் பாடப்பிரிவுகளையும் தேர்வு செய்து கொள்ளலாம்.
முதன் முதலாக இந்த வருடம் ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ள நிலையில் இணைய தளம் வழியாக விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர். கடந்த வருடத்தை விட 10 ஆயிரம் பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு ‘ரேண்டம்’ எண் நாளை வழங்கப்படுவதாக அண்ணா பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.
பி.இ., பி.டெக் முதலாம் ஆண்டு சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு நாளை காலை 9 மணிக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் ரேண்டம் எண் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ரேண்டம் எண்ணை கொண்டு ஒரே மதிப்பெண்களை பெற்ற 2-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கான இடங்கள் ஒதுக்கப்படும். ஒரே மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடங்களை தேர்வு செய்வதற்கு கணிதம், இயற்பியல் மற்றும் 4-வது விருப்பப்பட்ட மதிப்பெண்கள் மற்றும் பிறந்த தேதிக்கு பிறகு 5-வது காரணியாக இந்த சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) பயன்படுத்தப்படுகிறது. இது 10 இலக்குகளை கொண்டதாகும். கம்ப்யூட்டர் மூலம் ஒதுக்கப்படும்.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்ட பிறகு சான்றிதழ் சரிபார்க்கும் பணி தமிழகம் முழுவதும் 42 உதவி மையங்கள் மூலமாக வருகிற 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறுகிறது. #AnnaUniversity

Next Story