என் மலர்
செய்திகள்

தமிழ்நாட்டில் நக்சலைட்கள், பயங்கரவாதிகள் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
தமிழ்நாட்டில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
சென்னை:
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் பயங்கரவாதம் இல்லை. தமிழகத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது எப்படி பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் ஒடுக்கப்பட்டுள்ளது.
மேலும், காவிரி உள்பட அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி.மு.க.வால் எதிர்கொள்ள முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
Next Story






