என் மலர்
செய்திகள்

போடி அருகே திருவிழாவில் தகராறு செய்த ராணுவ வீரர் கைது
மேலசொக்கநாதபுரம்:
போடி பரமசிவன் கோவில் தெருவில் சாத்தாவுராயன் கோவில் உள்ளது. இக்கோவிலில் தற்போது வைகாசி திருவிழா மணிகண்டன் (வயது 55) என்பவர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (33), ராமச்சந்திரன் (36), முருகதாஸ் (33) ஆகியோர் காவடி எடுக்க சென்றனர்.
அப்போது அவர்களுக்கும் அங்கிருந்த மேளவாத்திய கலைஞர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை மணிகண்டன் தட்டிக் கேட்டார். அப்போது காவடி எடுக்க சென்ற 3 பேரும் சேர்ந்து மணிகண்டனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் திருவிழாவுக்காக கட்டப்பட்டு இருந்த அலங்கார வளைவுகளையும் டியூப் லைட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தினர். இது குறித்து மணிகண்டன் போடி நகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலமுரளி உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ராமச்சந்திரன் ராணுவ வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.






