என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னைக்கு சுற்றுலா வந்த போது காதலன் விட்டு சென்றதால் அந்தமான் பெண் தவிப்பு
    X

    சென்னைக்கு சுற்றுலா வந்த போது காதலன் விட்டு சென்றதால் அந்தமான் பெண் தவிப்பு

    அந்தமானில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த போது காதலன் விட்டு சென்ற இளம் பெண்னை தாம்பரத்தில் போலீசார் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர்.
    காஞ்சீபுரம்:

    தாம்பரம் ரெயில் நிலையம் அருகே 16 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வழி தெரியாமல் தவித்தபடி நின்றார்.

    இதனை பார்த்து சந்தேகம் அடைந்த பொது மக்கள் விசாரித்த போது அவர் அந்தமான் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் அதிகாரிகள் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினார். நண்பர் ஒருவருடன் கடந்த வாரம் சென்னையை சுற்றி பார்க்க வந்தோம். அம்பத்தூர் பகுதியில் தங்கி இருந்ததாகவும் திடீரென நண்பர் மாயமாகி விட்டார். இதனால் வழி தெரியாமல் சுற்றி வந்ததாக தெரிவித்தார்.

    ஆனால் அந்தமானில் உள்ள அவரது சொந்த ஊரில் போலீசார் விசாரித்த போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பே இளம்பெண் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதனால் அதிகாரிகள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    காதலனுடன் இளம்பெண் வந்து இருக்கலாம் எனவும், கொண்டு வந்த பணம் தீர்ந்த உடன் காதலன் மட்டும்சொந்த ஊருக்கு திரும்பி சென்று இருக்கலாம் என்றும் தெரிகிறது.

    மீட்கப்பட்ட இளம் பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்ப குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.#tamilnews
    Next Story
    ×