என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
ஓசூர் ரவுடி கொலையில் கைதான 2 வாலிபர்கள் சேலம் சிறையில் அடைப்பு
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜ் (வயது 32). பிரபல ரவுடி. இவர் மீது இரட்டை கொலை வழக்கு உள்பட மொத்தம் 3 கொலை வழக்குகள் இருந்தன.
இவர் சூளகிரி அட்ட குறுக்கியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 17-ந் தேதி இரவு வெங்கட்ராஜ் காமன்தொட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்த கொலை தொடர்பாக சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில் கிரானைட் நிறுவனத்தில் காண்டிராக்ட் எடுப்பதில் ஏற்பட்ட பிரச்சினையில் வெங்கட்ராஜ் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக சூளகிரி அருகே உள்ள ஒட்டர்பாளையத்தை சேர்ந்த கேசவன் (26), அவரது தம்பி சந்தோஷ் (23), கர்நாடக மாநிலம் ஆவேனக்கல்லை சேர்ந்த பாலாஜி (25), சூளகிரி ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்த எர்ரமுனியப்பா என்பவரின் மகன் மாதேஸ்வரன் (27), அவரது சகோதரர் மல்லேகவுடு ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடிவந்தனர். அவர்களில் கேசவன், அவரது தம்பி சந்தோஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரும் கடந்த 19-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் போலீசார் தேடி வந்த பாலாஜி, மல்லேகவுடு ஆகிய 2 பேரையும் சூளகிரி போலீசார் நேற்று கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் ஓசூர் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.