search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாணியம்பாடியில் சாராயம் விற்ற வாலிபர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது
    X

    வாணியம்பாடியில் சாராயம் விற்ற வாலிபர் மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது

    வாணியம்பாடியில் தொடர்ந்து சாராயம் விற்ற வாலிபர் 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வாணியம்பாடி நேதாஜிநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் திருப்பதி (வயது 24). சாராயம் விற்பனை செய்ததாக வெங்கடேசன் மீது வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்ட திருப்பதி கடந்தாண்டு குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஜெயிலில் இருந்து திருப்பதி வெளியே வந்தார். அதன்பின்னரும் அவர் சாராயம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையிலான போலீசார் நேதாஜி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பெரிய கேனுடன் வந்த திருப்பதியை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.

    அந்த கேனில் சாராயம் இருந்தது. போலீசார் விசாரணையில், மோட்டார்சைக்கிளில் சாராயத்தை திருப்பதி கடத்தி வந்து நேதாஜி நகரில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து திருப்பதியை போலீசார், கைது செய்து வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    திருப்பதி தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்ததால், அவரை 2-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பகலவன், பரிந்துரை செய்தார். அதன்பேரில் திருப்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி கலெக்டர் ராமன் உத்தரவிட்டார்.

    அதையடுத்து, அதற்கான ஆணையின் நகல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் திருப்பதியிடம் நேற்று போலீசார் வழங்கினர். 
    Next Story
    ×