என் மலர்
செய்திகள்

கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடர்வோர் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்தது
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனை டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் சில மாதங்களுக்கு முன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி, நடத்தி வருகிறார். நாட்டில் நிகழும் அன்றாட சம்பவங்கள் குறித்தும், தன்னை பாதித்த விஷயங்கள் குறித்தும் சமூக வலைதளமான டுவிட்டரில் தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் டுவிட்டரில் இணைந்த கமல்ஹாசன் பதிவிடும் கருத்துகளுக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதேசமயம், வேறு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை சமூக வலைதளமான டுவிட்டரில் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக உயர்ந்துள்ளது. #KamalHaasan #Twitter
Next Story






