என் மலர்
செய்திகள்

விருத்தாசலம் அருகே பெயிண்டரை கொல்ல முயன்ற 2 பேர் கைது
விருத்தாசலம்:
விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). பெயிண்டர். இவருக்கு விருத்தாசலத்தைச் சேர்ந்த நவீன், பரத்ராஜ், சுகுந்த், பிரேம், சுரேஷ் மற்றும் சிலர் நண்பர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில் சதீஷ்குமார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்திறங்கிய நவீன் உள்ளிட்டவர்கள் சதீஷ்குமாரை கத்தியால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இதில் முகம், கைகளில் காயமடைந்த அவர் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். தகவல் கிடைத்து விரைந்து சென்ற விருத்தாசலம் போலீசார் சதீஷ்குமாரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வருகிறார்.
இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைராகி மடத்தைச் சேர்ந்த பரத்ராஜ் (26), மேட்டுத்தெருவைச் சேர்ந்த வாசுதேவன் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.






