என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்.வி.சேகரை கைது செய்ய நடுங்குகிறார் - ஜெயக்குமார் மீது தினகரன் பாய்ச்சல்
    X

    எஸ்.வி.சேகரை கைது செய்ய நடுங்குகிறார் - ஜெயக்குமார் மீது தினகரன் பாய்ச்சல்

    எஸ்.வி. சேகரை கைது செய்ய அமைச்சர் ஜெயக்குமார் நடுங்குவதாகவும், வரும் தேர்தலுக்கு பிறகு அவர் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
    சென்னை:

    புதுவண்ணாரப்பேட்டை இளையமுதலி தெருவில் உள்ள வீட்டில் டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    கர்நாடக தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைக்க உள்ளது. புதிதாக பதவி ஏற்கும் அரசு தமிழ்நாடு விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் காவிரி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட காவிரி வரைவு திட்டத்தை பார்க்கும்போது மாநில அரசுகள் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் உள்ளது.

    கமலின் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

    நான் மிரட்டல் விடும் தொனியில் பேசுவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர்தான் தினமும் காலை எழுந்தவுடன் பத்திரிகையாளர்களை சந்தித்து மிரட்டல் விடும் தொனியில் பேசி வருகிறார்.

    விவேக் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்தான் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசுகிறார். முதலில் எஸ்.வி. சேகரை கைது செய்ய சொல்லுங்கள். அவரை கைது செய்ய பயந்து நடுங்குகிறார்கள்.

    வரும் தேர்தலுக்கு பிறகு ஜெயக்குமார் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்.

    சசிகலா நோட்டீஸ் மூலம் திவாகரனுக்கு உரிய பதில் தெரிவித்து விட்டார். நான் அவரைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது வெற்றிவேல் உடன் இருந்தார்.
    Next Story
    ×