search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை மழை
    X

    ஈரோடு மாவட்டத்தில் பரவலாக கோடை மழை

    ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கோடை மழை பெய்தது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடைமழை கொட்டி வருகிறது. நேற்றும் வழக்கம் போலவெயில் வறுத்தெடுத்தாலும் மாலையில் திடீரென கருமேகக் கூட்டங்கள் சூழ்ந்தன.

    மாலை 6 மணிக்கு மேலும் இரவு 8 மணிக்கு மேலும் இடி-மின்னலுடன் மழை கொட்டத்தொடங்கியது.

    பவானி, மொடக்குறிச்சி மற்றும் சிவகிரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதேபோல் பெருந்துறை, பவானிசாகர் மற்றும் வனப்பகுதியான தாளவாடியிலும் பரவலாக மழை பெய்தது. சூறை காற்றுடன் மழை பெய்ததால் இக்களூர் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்டமரங்கள் முறிந்து விழுந்தது. மின்சார கம்பம் மீது மரம் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    தாளவாடி பகுதியில் தொடர்ந்து 3 நாட்களாக கோடைமழை கொட்டி வருகிறது. அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் பலத்த இடியும்- மின்னலுமாக இருந்தது. கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிதமான மழை மட்டுமே பெய்தது.

    எனினும் ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து கோடை மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×