என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரியகுளம் அருகே தேர்வு எழுத சென்ற மாணவி மாயம்
    X

    பெரியகுளம் அருகே தேர்வு எழுத சென்ற மாணவி மாயம்

    பெரியகுளம் அருகே கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவி மாயமானது குறித்து பெற்றோர் போலீசார் புகார் செய்தனர். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் வடக்குகாலனி பகுதியை சேர்ந்தவர் ராஜூ மகள் மஞ்சு(வயது17). பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

    சம்பவத்தன்று தேர்வு எழுதச்செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் மஞ்சு வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் கல்லூரிக்கு வந்து விசாரித்தனர்.

    ஆனால் அவர் தேர்வு முடிந்து ஊர் திரும்பியதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரில் கோகிலாபுரம் பகுதியை சேர்ந்த குணசேகரன் மகன் மனோஜ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×