என் மலர்
செய்திகள்

கந்தர்வக்கோட்டையில் மக்கள் விடுதலை கம்யூ.சார்பில் ஆர்ப்பாட்டம்
கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை:
கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் தாலுகா செயலாளர் ராஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்டச்செயலர் தினேஷ் குமார் தொடக்கவுரை ஆற்றினார். போராட்டத்தில் கந்தர்வக் கோட்டை ஊராட்சி ஒன்றியம் முழுவதும் தேசிய ஊரக வேலை உறுதிச்சட்டத்தை செயல்படுத்தக்கோரியும், கந்தர்வக்கோட்டை பேருந்து நிலையம், காந்திசிலை நிறுத்தம்,கறம்பக்குடி முக்கம் ஆகிய இடங்களில் கழிப்பறை வசதி செய்துதரக்கோரியும், கந்தர்வக்கோட்டை பகுதிகளில் செயல்பட்டுக் கொண்டிருந்த முந்திரி தொழிற்சாலைகளில் உடனே திறக்க வேண்டும், மேலும் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் விடுதலைக்குமரன் விளக்கவுரையாற்றினார். போராட்டத்தில் ஜனநாயக விவசாயிகள் சங்கம் மூக்கையன், செல்லையா,மற்றும் கலைச் செல்வன், கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Next Story