என் மலர்
செய்திகள்

உத்திரமேரூர் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
உத்திரமேரூர் அருகே திருமண ஏக்கத்தில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காஞ்சீபுரம்:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா உக்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராமலு. இவரது மகன் மணிகண்ணன் (20). மாங்கால் கூட் ரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் மானம்பதி மருத்துவமனைக்கு எதிரே வாயில் நுரை தள்ளி மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு மருத் துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மணிகண்ணன் திருமண ஏக்கத்தில் இருந்ததாகவும், அவர் வீட்டிலிருந்து கொக்கு மருந்தை சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பெருநகர் போலீசார்வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story






