என் மலர்

    செய்திகள்

    சேலத்தில் தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்
    X

    சேலத்தில் தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சேலத்தில் தேர்வு எழுத சென்ற கல்லூரி மாணவி மாயமானது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி, அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் சவுந்தர்யா(வயது22).

    இவர், சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரியில் எம்.காம் இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி சவுந்தர்யா கல்லூரியில் தேர்வு எழுத செல்வதாக கூறி விட்டு காலையில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். மாலை வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்லூரிக்கு சென்று தேடினர். அங்கு சவுந்தர்யா இல்லை. இதனால் அவரது தோழி குர்ஷீத்திடம் சவுந்தர்யா இன்னும் வீட்டிற்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியுமா என்று விசாரித்தனர்.

    சவுந்தர்யா எங்கு சென்றார் என தனக்கு தெரியாது. ஆனால் சம்பவத்தன்று மதியம் 2.30 மணிக்கு பரீட்சை எழுதி முடித்து விட்டு வீட்டிற்கு போவதாக தன்னிடம் சொல்லிவிட்டு சென்றார் என குர்ஷீத் கூறினார்.

    இதையடுத்து பெற்றோர் ஊர் முழுவதும் மகளை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் பெற்றோர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவி எங்கு சென்றார்? என்ன ஆனார்? யாராவது கடத்திச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×