என் மலர்

  செய்திகள்

  திருமங்கலத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது சரமாரி தாக்குதல் - 3 பேர் கைது
  X

  திருமங்கலத்தில் பாதுகாப்பு படை வீரர் மீது சரமாரி தாக்குதல் - 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருமங்கலத்தில் பாதுகாப்பு படை வீரரை சரமாரி தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பேரையூர்:

  திருமங்கலம் அருகே உள்ள சின்ன உலகாணியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது 33). இவர் இடையூரில் உள்ள இந்திய எல்லை பாதுகாப்பு படை பிரிவில் வீரராக உள்ளார். இவரது மனைவி லீலா.

  கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதுகுறித்து லீலா, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று லீலாவின் பெற்றோர் ஜக்கையன்-சுந்தரம்மாள், சகோதரர் பிரகாஷ் (27), அவரது நண்பர்கள் அருண், முருகன் ஆகியோர் காளியப்பனிடம் தட்டிக்கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் 5 பேரும் தன்னை தாக்கி, மண்டையை உடைத்ததாக காளியப்பன் கூடக்கோவில் போலீசில் புகார் செய்தார்.

  போலீசார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷ், அருண், முருகன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் லீலா கொடுத்த புகாரின் பேரில் காளியப்பன், அவரது உறவினர்கள் பாண்டி, புவியரசன், தவசி ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  Next Story
  ×