என் மலர்

    செய்திகள்

    குரூப்-4 தேர்வுக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு 9-ந்தேதி நடைபெறும் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
    X

    குரூப்-4 தேர்வுக்கான 4-ம் கட்ட கலந்தாய்வு 9-ந்தேதி நடைபெறும் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    குரூப்-4 தேர்வுக்கான 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    குரூப்-4 2015-16-ல் அடங்கிய இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 6-ந்தேதி எழுத்துத்தேர்வு நடத்தியது. அதற்கான தேர்வு முடிவுகள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வு தொடர்பான இளநிலை உதவியாளர் பதவிக்கான 6 காலிப்பணியிடங்கள் மற்றும் தட்டச்சர் பதவிக்கான 2 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வருகிற 9-ந்தேதி 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்ட அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல், எஸ்.எம்.எஸ். மற்றும் இ-மெயில் மூலமும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை எண் மற்றும் கணினிவழி விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் அடிப்படையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு 1:5 என்ற விகிதத்தில் அழைக்கப்பட்டுள்ளனர். எனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டதாலேயே அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டதாக உரிமம் கோர இயலாது. விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறித்த நேரத்தில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×