என் மலர்
செய்திகள்

சேலத்தில் 4 பிரபல ரவுடிகள் கைது
சேலத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 4 பிரபல ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குண்டர் சட்டத்தில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருண் (22). இவர் அந்த பகுதியில் நடந்து சென்ற போது 4 பேர் கும்பல் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.1000 பணம் பறித்ததாக அன்னதானப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் மணியனூரை சேர்ந்த பிரபல ரவுடிகளான ரங்கன் (45), கருமயில் (36), ஆப்பிள் (41), பழனிசாமி (50) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
இதில் ரங்கன் மீது 16 வழக்குகளும், கருமயில் மீது 8 வழக்குகளும், ஆப்பிள் மீது 12 வழக்குகளும், பழனிசாமி மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இதனால் அவர்கள் குண்டர் சட்டத்தில் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
Next Story