என் மலர்
செய்திகள்

கிருமாம்பாக்கம் அருகே ரவுடிக்கு ஆதரவாக செயல்பட்ட தாய் மீது தாக்குதல்
பாகூர்:
கிருமாம்பாக்கம் அருகே மதிகிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அஞ்சலை (வயது 50). இவரது மகன் மணிகண்டன் (30). ரவுடியான இவர் மீது அடிதடி உள்ளிட்ட3 வழக்குகள் உள்ளன.
இவர் அடிக்கடி மது குடித்து விட்டு குடி போதையில் அந்த வழியாக செல்வோரை வழிமறித்து தாக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதுபோல் நேற்று மணிகண்டன் மது குடித்து விட்டு அந்த பகுதியில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த சிறுவர்களை தாக்கினார்.
இதனை அதே பகுதியை சேர்ந்த டேவிட், சகுந்தலா உள்ளிட்ட 4 பேர் மணிகண்டனிடம் தட்டி கேட்டனர். அப்போது மணிகண்டனுக்கு ஆதரவாக அவரது தாய் அஞ்சலை பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த டேவிட் உள்ளிட்ட 4 பேரும் சேர்ந்து சிறுவர்கள் வைத்திருந்த கிரிக்கெட் மட்டையால் அஞ்சலையை தாக்கினர்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அஞ்சலை அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து கிருமாம் பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் விசாரணை நடத்தி டேவிட், சகுந்தலா உள்பட 4 பேர் மீதும் வழக்குபதிவு செய்துள்ளார்.