என் மலர்
செய்திகள்

பொன்னேரி அருகே மின்வாரிய அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை
பொன்னேரி அருகே மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் துரைசாமி நகர் ஏழுமலை நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணி அளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது. பொது மக்கள் புகார் தெரிவித்தும் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் மின்சப்ளை சீரானது.
Next Story